Xiaomi இருந்து மற்றொரு பிராண்ட் Pocophone ஸ்மார்ட்போன் மலேசியாவில் தொடங்கியுள்ளது. நீங்கள் மலேசியா Xiaomi இருந்து F1 Pocophone வாங்க முடியும். அதற்கு முன் Pocophone உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

POCOPHONE F1

1/3

Pocophone-இல், உள்ளே Qualcomm Snapdragon 845 processor உள்ளது. இந்த processor, ஒரு விலைஉயர்ந்த தொலைபேசியில் தான் கிடைக்கும். ஆனால், இவர்கள் அந்த processor-ஐ, இந்த F1 தொலைபேசியில் உட்செலுத்தினார்கள். இதனோடு 6GB RAM மற்றும் 128GB storage வரை கிடைக்கும்.

இந்த தொலைபேசியின் முன்னாள், 6.18″ இன்ச் full HD display உள்ளது. அதற்குமேல் ஒரு 20MP selfie கேமராவும் உள்ளது. இதற்கு பின்புறம், இரண்டு கேமராவும் உள்ளது – முதல் 12MP SONY sensor மற்றும் இரண்டாவது 5MP Samsung sensor இருக்கிறது.

Pocophone இன் படி, இந்த தொலைபேசி 2 நாள் தாங்கும் என்று கூறினார்கள். அதற்கு காரணம் – இந்த 4000mAh பேட்டரி. இதை வேகமாக சார்ஜ் செய்ய Quick Charge 4.0 support இந்த தொலைபேசிக்கு இருக்கிறது.

உங்கள் டாக்குமெண்டை பாதுகாப்பாக வைப்பதற்கு, பின்புறத்தில் ஒரு fingerprint sensor இருக்கிறது. அதனோடு Face Unlock அம்சமும் செலுத்தப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தகவல்

30-ஆம் ஆகஸ்ட்-இல் இருந்து, இந்த Pocophone F1 இரண்டு வகைகளில் கிடைக்கும். 6GB | 64GB வகை RM 1,237 (SST தவிர்த்து) மற்றும் 6GB | 128GB வகை RM 1,428 (SST தவிர்த்து) விலையில் விற்கப்படும்.

ஆனால், 10வது September இருந்து, SST காரணத்தினால் இந்த விலை மாறுபடும்.

6GB | 64GB – RM 1299 மட்டுமே.
6GB | 128GB – RM 1499 மட்டுமே.